ஊழியர்களுக்கு இன்சூரன்ஸ் தொகையை 10 லட்சமாக உயர்த்திய மேற்கு வங்க முதல்வர்.!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் அத்தியாவசிய தேவைகள் மட்டும் கிடைக்கும் அளவிற்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மருத்துவ ஊழியர்கள், காவல்துறையினர், வாகன போக்குவரத்து ஊழியர்கள் என பலருக்கு மத்திய மாநில அரசுகள் பல சலுகைகள் அளித்துள்ளது.
அந்த வகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மருத்துவ ஊழியர்கள், காவல்துறையினர், வாகன போக்குவரத்து ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் என பலருக்கு 5 லட்சமாக இருந்த காப்பீட்டு (இன்சூரன்ஸ்) தொகையினை 10 லட்சமாக உயர்த்தி மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அம்மாநிலத்தில் அறிவித்துள்ளார்.