மம்தா_வுக்கு பெருகும் ஆதரவு…அதிரும் மோடி அரசு….தேசிய அரசியலலில் பரபரப்பு…!!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.மேலும் அவர் மத்திய அரசு C.B.I_யை தவறாக பயன்படுத்துகின்றது . முறையாக அனுமதி பெறாமல் விசாரணை நடத்துவது ஏற்புடையது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு தொடர்ந்து இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மம்தா பானர்ஜி போராட்டத்திற்கு இந்தியளவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளர்னர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி , சமாஜ் வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் , பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி , தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் , டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் , காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா , ராஷ்ட்ரிய ஜனதா தல கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.