மம்தாவின் ‘தனித்த’ முடிவு.! கூட்டணியில் கருத்து வேறுபாடு சகஜம் தான்.! காங்கிரஸ் கருத்து.!

Jairam Ramesh - Mamata Banerjee

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பேனர்ஜி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மம்தா பேனர்ஜி, தாங்கள் இந்தியா கூட்டணியில் இருப்பதாகவும், அனால் மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று இருவேறு மாறுபட்ட கருத்துக்களை கூறினார்.

இந்தியா கூட்டணி தான்.! ஆனாலும் தனித்து போட்டி.! காங்கிரசுக்கு ‘ஷாக்’ கொடுத்த மம்தா.! 

மேலும், நாட்டில் அடுத்து என்ன நடக்கும் என்பதில் எங்களுக்கு கவலையில்லை. மேற்கு வங்கத்தில் நாங்கள் தனித்து பாஜகவை எதிர்ப்போம் என்றும், இதுவரை காங்கிரஸ் கட்சி கூட்டணி குறித்து பேசவில்லை என்றும், மேற்கு வங்கத்தில் நடைபெறும் ராகுல்காந்தியின் பாத யாத்திரை குறித்தும் காங்கிரஸ் எதுவும் கூறவில்லை என்றும் பேசியிருந்தார்.

மம்தாவின் இந்த கருத்துக்கள் இந்தியா கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. இது குறித்து இன்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்படுவது சகஜம் தான். அதனை நாங்கள் பேசி தீர்த்து கொள்வோம் என பேசினார்.

மேலும், மம்தா பேனர்ஜி ஒரு போதும் பாஜகவை ஆதரிக்க மாட்டார். பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருப்பவர் மம்தா. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாத யாத்திரைக்கு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ்  அசாமில் நடைபெற்று வரும் பாரத நியாய யாத்திரையின்போது  தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்