மம்தா vs பாஜக: மேற்குவங்கத்தை பிடிக்க கங்குலியிடம் நிர்பந்தம்.!

Default Image

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போது உள்ள பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் ஆகும். இன்னும் ஒருசில மாதங்களில் மேற்கு வாங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பல யுத்திகளை பாஜக மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

அதில், சவுரவ் கங்குலியை முதல்வர் வேட்பாளராக களமிறக்கி மேற்கு வங்கத்தை பிடிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கங்குலி தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார். இதனிடையே, சமீபத்தில் மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தங்கரை கங்குலி சந்தித்தது பேசியது பலருக்கும் பேசும்பொருளாக மாறியது. இந்த சந்திப்பு குறித்து ஆளுநர் தனது ட்விட்டர் பதிவில், பிசிசிஐ தலைவர் கங்குலியுடன் உரையாடியது மிகுந்த மகிழ்ச்சி என்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம் என கூறிருந்தார்.

இதையடுத்து, ஜனவரி 2-ஆம் தேதி சவுரவ் கங்குலிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், கங்குலி இதயத்தில் இரண்டு அடைப்புகள் உள்ளன. ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர். கங்குலி விரைவில் மீண்டு வரவேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

மம்தா பானர்ஜி மற்றும் பாஜக இடையே கடும் மோதல் நிலவி வருவதால், கங்குலி மற்றும் தங்கர் சந்திப்பு தொடர்பான யுகங்கள் அதிகரித்துள்ளன. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டசபை தேர்தல்களை அடுத்து, சவுரவ் கங்குலியின் அரசியல் ஈடுபாடு குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மேற்கு வங்கத்திற்கான இரண்டு நாள் பயணத்தின் போது உள்துறை அமைச்சர் அமித்ஷா, ​​மேற்கு வங்கத்தில், பாஜக வங்காள மண்ணை சேர்ந்தவரை தான் முதல்வராக ஆக்கும் என அறிவித்தார்.

இத்தகைய சூழ்நிலையில், கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாஜகவின் அழுத்தம் காரணமாகத்தான் கங்குலி மருத்துவமனையில் உள்ளாரா? அவருக்கு உண்மையாகவே உடல்நிலை கோளாரா? என்ற பல கேள்விகள் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. கங்குலி ஆளுநருக்கு இடையிலான சந்திப்பு, அமித்ஷா அறிவிப்பு என அரசியல் முக்கியத்துவம் பெற்று பல கேள்விகளை எழுப்புகிறது. இதற்கான விடை கூடிய விரைவில் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்