மம்தா ஊழலுக்கு ஆதரவாக செயற்படுகின்றார்…பாஜக_வின் நரசிம்ம ராவ் சாடல்….!!
ஊழலுக்கு ஆதரவாக செயல்படும் மம்தா உச்சநீதிமன்ற உத்தரவை கடைபிடிக்கவில்லை என்று பாஜக_வின் மூத்த தலைவர் நரசிம்ம ராவ் சாடியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.மேலும் அவர் மத்திய அரசு C.B.I_யை தவறாக பயன்படுத்துகின்றது . முறையாக அனுமதி பெறாமல் விசாரணை நடத்துவது ஏற்புடையது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு தொடர்ந்து இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் நரசிம்ம ராவ் தனது ட்வீட்_டர் பக்கத்தில் தெரிவிக்கையில் , ஊழலுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் மம்தா உச்சநீதிமன்ற உத்தரவை கடைபிடிக்கவில்லை என்று சாடியுள்ளார்.
CMs @ncbn @MamataOfficial @ArvindKejriwal are protecting the corrupt & violating constitution they swore by & FRAUDULENTLY claiming to save democracy. Withdrawal of 'General Consent' to CBI is NOT an omnibus exemption. CBI probing chitfund cases on the orders of Supreme Court. https://t.co/Rbax0n3DrO
— జీవీఎల్ నరసింహరావు (మోడీ గారి కుటుంబం) (@GVLNRAO) February 4, 2019