மைக் விவகாரம்.! மம்தா பொய் கூறுகிறார்.? இதுதான் உண்மையாம்…

West Bengal CM Mamata Banerjee

டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மம்தா பானர்ஜியை தவிர இந்தியா கூட்டணியின் மாநில முதல்வர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் மம்தா பேசுகையில், தனக்கு போதிய நேரம் வழங்கப்படவில்லை எனவும், தான் பேசும் போது மைக் அணைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.

மேலும், மம்தா பேனர்ஜி பேசுகையில் , பாஜக மற்றும் கூட்டணி கட்சி முதல்வர்களுக்கு 10 -20 நிமிடங்கள் பேச அனுமதி வழங்ப்பட்டது என்றும் மம்தா குற்றம் சாட்டினார். இந்த நிகழ்வு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார்.

இப்படியான சூழலில், மத்திய தகவல் தொடர்புத்துறையின் உண்மை சரிபார்ப்பு துறை தனது சமூக வளைதள பக்கத்தில் பதிவிடுகையில், ” நிதி ஆயோக்கின் 9வது ஆட்சிக்குழு கூட்டத்தின் போது மேற்கு வங்க முதல்வரின் மைக்ரோஃபோன் அணைக்கப்பட்டதாக குற்றசாட்டு  கூறப்பட்டது.

ஆனால், அந்த கூற்று உண்மையில்லை. மம்தா பேனர்ஜி பேசுகையில், அவருக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது என கடிகாரம் தான் காண்பிக்கப்பட்டது.  நேரம் முடிந்துவிட்டதை குறிக்க அலாரம் மணி கூட அடிக்கப்படவில்லை.” என உண்மை சரிபார்ப்பு துறை விளக்கம் அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்