வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் புதன்கிழமை நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டம்.
வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி புதன்கிழமை மாநிலத்தின் கொரோனா பாதிப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தவுள்ளார். இக்கூட்டத்தில், பாஜக, காங்கிரஸ், சிபிஐ (எம்) மற்றும் பிற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், மேற்கு வங்க சட்டமன்ற சபாநாயகர் பிமான் பானர்ஜியும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இக்கூட்டமானது முதல்வர் தலைமையில் நடைபெற்று மூன்று மதத்திற்கு பின், மீண்டும் கூடவுள்ளது. மூன்று மாதத்திற்கு முன்பதாக அங்கு 7 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 58 வயது முதியவர் ஒருவர் மட்டுமே இந்த வைரஸ் தாக்கத்தால் காலமானார்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் மொத்தம் 14,358 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 569 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து, முதலமைச்சர் மம்தா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பி வருவதால், வங்காளத்தின் எண்ணிக்கை கணிசமாக உயரும், ஆனால் அதே நேரத்தில், மாநில அரசு முழுமையாக தயாராக இருப்பதால் குடிமக்கள் கவலைப்பட வேண்டாம் என்று அவர் உறுதியளித்திருந்தார்.
இந்தியாவில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மேற்கு வங்கம் 10-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…