நீட், ஜே.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி..பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம்.!
செப்டம்பர் 13 ஆம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வும், செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரைஜே.இ.இ மெயின் தேர்வும், செப்டம்பர் 27 ஆம் தேதி ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நேரத்தில் தேர்வுகளை நடத்துவது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என பல இந்த தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்குமாறு கடிதம் எழுதி உள்ளார்.
மேலும், மம்தா பானர்ஜி கூறுகையில், கொரோனா பரவல் நேரத்தில் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும் . மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தருவது நமது கடமை என கூறியுள்ளார்.