முகத்தில் வழிந்த ரத்தம்.. பதறிய தலைவர்கள்.. பத்திரமாக வீடு திரும்பிய மம்தா.! 

West Bengal Leader Mamata Banerjee

Mamata Banerjee : நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதள பக்கத்தில் ஓர் அதிர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டது.அதில் மேற்கு வங்க மாநில முதல்வரும், திரினாமுக் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பேனர்ஜி, தலையில் காயத்துடன், முகத்தில் வழிந்தோடும் ரத்தத்தோடு இருக்கும் புகைப்படம் வெளியானது.

Read More – மம்தா பானர்ஜி படுகாயம்..! நெற்றியில் கடுமையான ரத்த காயங்களுடன் வெளியான புகைப்படங்களால் அதிர்ச்சி

அதில் மம்தாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று மட்டுமே குறிப்பிடபட்டு இருந்தது. வேறு எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த காயம் குறித்து மம்தாவின் சகோதரர் கார்த்தி பானர்ஜி பெங்காலி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்.  தெற்கு கொல்கத்தாவின் பாலிகங்கேயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மம்தா வீடு திரும்பினார் . அப்போது வீட்டிற்குள் தவறி விழுந்து இந்த காயம் ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.

Read More – பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைப்பு! மத்திய அரசு அறிவிப்பு

காயம் ஏற்பட்டது உடன், உடனடியாக கொல்கத்தாவில் உள்ள SSKM மருத்துவமனைக்கு மம்தா அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நெற்றியில் தையல் போடப்பட்டது. பின்னர் தலையில் கட்டுடன் நரம்பியல் துறையினரிடம் மருத்துவ ஆலோசனை பெற்றார். அதற்கு பிறகு,  வீல் சேரில் மம்தா வீடு திரும்பினார். வீட்டில் சில நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெறுவார் என கூறப்படுகிறது.

Read More – தேர்தல் பத்திரங்கள்! விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்… கோடிகளை கொட்டி கொடுத்த நிறுவனங்கள்

மம்தாவிற்கு ஏற்பட்ட இந்த சிறிய விபத்து குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் மம்தாவின் நிலை கண்டு அதிர்ச்சியடைந்ததாகவுவம், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்