5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதனையடுத்து முதல் மந்திரியாக மம்தா பானர்ஜி பதவி ஏற்ற பின்பு, தற்பொழுது முதல் முறையாக டெல்லி சென்றுள்ளார். நேற்று மாநில மந்திரிசபை கூட்டம் முடிந்ததும், கொல்கத்தாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மம்தா விமானம் மூலமாக டெல்லி சென்றுள்ளார்.
இந்நிலையில், இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் பிரதமர் மோடி அவர்களை மாலை 4 மணி அளவில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் எனவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரான கமல்நாத் மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோரையும் பிற்பகல் 2 மற்றும் 3 மணியளவில் அடுத்தடுத்து சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…