குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் தலைமையில் பிரமாண்ட பேரணி!

- மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
- மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பேனர்ஜி தலைமையில் தற்போது மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், மாணவர்கள் என பலர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தற்போது மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பேனர்ஜி தலைமையில் அவர்களது தொண்டர்களுடன் மாபெரும் பேரணி நடத்தி வருகிறார். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மாபெரும் பேரணி நடத்தப்படுவது நாடு முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது.