பிரதமர் மோடியை,அவமதித்த மம்தா பானர்ஜி – ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் கண்டனம்..!
யாஸ் புயல் குறித்து பிரதமர் மோடி நேற்று நடத்திய ஆய்வுக்கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்து,பிரதமர் மோடியை,அவமதித்து விட்டார் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று யாஸ் புயல் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களை மேற்பார்வையிட்டார். அப்போது புயல் குறித்த ஆய்வுகூட்டத்தில் பிரதமர் மற்றும் மேற்கு வங்க ஆளுநர் மட்டுமே வருகை புரிந்த நிலையில்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரை மணி நேர தாமதமாக வந்துள்ளார். மம்தா பானர்ஜி வந்தவுடன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கை ஒன்றை வழங்கிவிட்டு ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்காமல் சென்றுவிட்டார்.
இச்சம்பவம் குறித்து மத்திய அமைச்சர்கள்,பா.ஜ.க உறுப்பினர்கள் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதனை தொடர்ந்து அதிரடியாக மேற்கு வங்க தலைமை செயலாளர் அலபன் பண்டா பாத்யாயா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில்,யாஸ் புயல் குறித்து பிரதமர் மோடி நேற்று நடத்திய ஆய்வுக்கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்ததற்காக,மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்,இதுகுறித்து முதல்வர் சிவராஜ் சிங் கூறுகையில்,”புயல்பாதிப்பை மதிப்பிட வந்த பிரதமர் மோடியை,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவமதித்து விட்டார்.பிரதமர் மோடியை ஒட்டுமொத்த நாடே பின்பற்றுகிறது .ஆனால்,அவரை மம்தா பானர்ஜி அவமதித்துள்ளார்.இதனால்,முதல்வர் மம்தா,தன்னை தேர்ந்தெடுத்த மக்களின் நலனில் அக்கறை இல்லாதவராக தெரிகிறார்.
நானும் ஒரு முதலமைச்சர்தான்,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜியின் காலத்தில் கூட முதல்வர் பதவியில் இருந்தேன்.ஆனால் நான் அவரை ஒருபோதும் அவமதிக்கவில்லை”,என்று கூறினார்.
राजनीति का इतना निचला स्तर मैंने कभी नहीं देखा, जो आज ममता जी ने किया।
मैंने पहले ही TMC का मतलब बताया था कि तोड़ो, मारो, काटो।
जीतने के बाद प्रतिद्वंदियों को तोड़ना, मारना शुरू कर दिया था ममता दीदी ने; अब बंगाल को भारत से काट रही हैं! pic.twitter.com/EEiU4IuWhD
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) May 28, 2021