மம்தா பானர்ஜி மறைமுகமாக பாஜகவுக்கு உதவுகிறார்- தீபா தாஸ் முன்ஷி..!

Deepa Das Munshi

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்கு  காங்கிரஸ், திமுக, ஆம்ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) எனும் கூட்டணியை உருவாக்கினர். இந்தியா கூட்டணியின் 5 ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், கடைசி ஆலோசனைக் கூட்டம் கடந்த 13-ஆம் தேதி காணொளி வாயிலாக நடைபெற்றது.

இந்நிலையில், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவோம் என இன்று மம்தா பானர்ஜி அறிவித்தார். மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை. பாஜக-வை தனித்து நின்று தோற்கடிப்போம் என கூறினார். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் ஒரு அங்கமாக உள்ளது. ராகுல் காந்தி நடைப்பயணம் எங்கள் மாநிலம் வழியாக செல்கிறது. ஆனால் அது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என தெரிவித்தார்.

மம்தாவின் ‘தனித்த’ முடிவு.! கூட்டணியில் கருத்து வேறுபாடு சகஜம் தான்.! காங்கிரஸ் கருத்து.!

திரிணாமுல் காங்கிரசு கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி, லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடுவேன் என்று கூறியது குறித்து தெலுங்கானா காங்கிரஸ் பொதுச் செயலாளர் தீபா தாஸ் முன்ஷி கூறுகையில், “மம்தா பானர்ஜி மறைமுகமாக பாஜகவுக்கு உதவுகிறார் என்று நினைக்கிறேன். பாஜக-வுடன் மௌனமான புரிதல் உள்ளது என்பதை இந்த முடிவு நிரூபித்துள்ளது.

இவ்வளவு காலம் இந்தியா கூட்டணியில்  இருந்த அவர் தற்போது தனது கருத்தை மாற்றிக்கொண்டுள்ளார். அதனால் அவர் பாஜகவுடன் கைகோர்த்து வங்காளத்தில் அவர்களுக்கு உதவுவார் என்பதை இது நிரூபித்துள்ளது” என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்