இந்தியா கூட்டணி தான்.! ஆனாலும் தனித்து போட்டி.! காங்கிரசுக்கு ‘ஷாக்’ கொடுத்த மம்தா.! 

Mamata banerjee - Rahul gandhi

2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் , திமுக, ஆம்ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) எனும் கூட்டணியை உருவாக்கினர். இந்த கூட்டணியில் மே.வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் இருந்தது.  மம்தா பேனர்ஜி இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டங்களிலும் பங்குபெற்றார்.

தற்போது வெளியான தகவலின்படி, இன்று மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பேனர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் உடன் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ராகுலுக்கு பாதுகாப்பு குறைபாடு… அசாமில் வழக்குப்பதிவு! அமித்ஷாவுக்கு கார்கே கடிதம்!

அதில், நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிட போவதாகவும், இதுவரை காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணியில் தாங்கள் இருக்கிறோம். ஆனால் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டி தான் உறுதியாக கூறியுள்ளார் என்றும்,

நாட்டில் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றி தங்களுக்கு கவலை இல்லை, எங்களுக்கு மேற்கு வங்கம் முக்கியம். நாங்கள் மதச்சார்பற்ற கட்சி. நாங்கள் தனியாக பாஜகவை தோற்கடிப்போம் என்று கூறிய மம்தா,  ராகுல் காந்தியின் பாரத நியாய யாத்திரை எங்கள் மாநிலம் வழியாக செல்கிறது, ஆனால் அது குறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் மம்தா ஆலோசனை கூட்டத்தில் கூறியுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில்  மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் 10 முதல் 12 இடங்கள் கேட்டதாகவும், ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 2 சீட் மட்டுமே தருவதாக கூறியதாகவும் அதன் பிறகு இரு கட்சிகளும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்