காங்கிரஸ் கூட்டணியே வேண்டாம்., நாங்கள் தனித்து நிற்கிறோம்! மம்தா அதிரடி முடிவு! 

2026 மேற்கு வங்க சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

Rahul gandhi - Mallikarjuna Kharge - Mamata Banerjee

கொல்கத்தா :  தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு (2026) இடையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான தேர்தல் வேலைகளில் பிரதான ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் அம்மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 2011 மே மாதம் முதல் , 2016, 2021 என மூன்று சட்டமன்ற தேர்தலிலும் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது திரிணாமுல் காங்கிரஸ். 3வது முறையாக முதலமைச்சர் பதவியில் தொடரும் மம்தா பானர்ஜி, 4வது முறையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கையில் செயல்பட்டு வருகிறார்.

2026 தேர்தல் தொடர்பாக மம்தா, தனது கட்சி எம்எல்ஏக்கள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.அப்போது அவர் 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என தெரிவித்தார். காங்கிரஸ் மட்டுமல்லாது வேறு எந்த கட்சியுடனும் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி இல்லை என்றும் 2026-ல் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து இந்தியா (I.N.D.I.A ) கூட்டணியில் அங்கம் வகித்தாலும் , அந்த தேர்தலிலேயே மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை எனக் கூறியது திரிணாமுல் காங்கிரஸ் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 2026 கூட்டணி குறித்தும் அக்கட்சி தலைவர் மம்தா திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அடுத்தடுத்த சட்டமன்ற தேர்தல்களில் தொடர் தோல்விகளை கண்டு வரும் காங்கிரஸ் கட்சிக்கு இது மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து எம்எல்ஏக்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் மம்தா, கட்சியை மாநில தலைமை முதல் வாக்குசாவடி பூத் வரை மறுசீரமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காக எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொரு பதவிக்கும் 3 பெயர்களை வழிமொழிந்து தலைமைக்கு கூறும்படி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், கட்சி பதவிகளுக்கு பணம் வாங்கிய விவகாரம், அது தொடர்பான குற்றசாட்டுகளை மேற்கோள் காட்டிய மம்தா, இனி இதுபோல உட்கட்சி பிரச்சனை வரக்கூடாது. அதையும் மீறி வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பாக மால்டா மற்றும் மேற்கு பர்த்வான் மாவட்டங்களைச் சேர்ந்த உறுப்பினர்களை அவர் எச்சரித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 11 02 2025
donald trump angry
NarendraModi -Thaipoosam
India vs England 3rd ODI
champions trophy 2025 india squad
aadhav arjuna - prashant kishor
kanja karuppu