பாஜக பிரிவினைவாதத்தை தூண்டி விடுகிறது.! மே.வங்க முதல்வர் மம்தா கடும் தாக்கு.!
மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதிகளில் ராஜ்பன்ஷிகள் மற்றும் கூர்க்காக்கள் இடையே பிரச்சனைகளை பாஜக ஏற்படுத்துகிறது. இதன் மூலம் பிரிவினைவாதத்தை பாஜக தூண்டுகிறது. – மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி விமர்சனம்.
குஜராத் சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை ஒட்டி காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜக பிரச்சாரம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், வரவிருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தலைக் மனதில் வைத்து கொண்டுதான், குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றை பாஜக பயன்படுத்தி வருகிறது. என குற்றம் சாட்டினார்.
மேலும், ‘ மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதிகளில் ராஜ்பன்ஷிகள் மற்றும் கூர்க்காக்கள் இடையே பிரச்சனைகளை பாஜக ஏற்படுத்துகிறது. இதன் மூலம் பிரிவினைவாதத்தை பாஜக தூண்டுகிறது.’ எனவும் கடுமையாக குற்றம் சாட்டினார்.
மேலும், ‘மேற்கு வங்கத்தை பிரிக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.’ என மம்தா பேனர்ஜி கூறினார்.