#BigBreaking:மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 3 வது முறையாக முதல்வர் பதவியேற்றார் மம்தா பானர்ஜி..!

Default Image

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, மம்தா பானர்ஜி தொடர்ந்து 3 வது முறையாக இன்று முதல்வர் பதவியேற்றுள்ளார்

மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் கடும் சவாலை எதிர்கொண்டு மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிரடி வெற்றி பெற்றது.இதனால்,மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வராக இன்று பதவி ஏற்றுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக இந்த பதவியேற்பு விழாவானது மிக எளிய முறையில் கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்தில்கொண்டு இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க,மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேப் பட்டச்சார்ஜி,எதிர்க்கட்சி தலைவரான அப்துல் மன்னன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பீமன் போஸ்,திரிணாமுல் எம்.பி. அபிஷேக் பானர்ஜி,தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சவுரவ் கங்குலி ஆகிய குறைந்த பட்ச நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து,இன்று காலை 10.45 மணிக்கு ஆரம்பமாகிய இந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஜகதீப் தங்கர் முன்னிலையில்,மம்தா பானர்ஜி முதல்வராக பதவி ஏற்றார்.இதனால், தொடர்ந்து 3 வது முறையாக மேற்கு வங்க முதல்வராகப் பதவியேற்று மம்தா பானர்ஜி வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்