குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 19-ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூரு இடத்தில் போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.இந்த துப்பாக்கி சூட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட அப்துல் ஜலீல், நவுசீன்(23) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.இதனால் அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.மேலும் இந்த போராட்டத்திடி போராட்டக்காரர்கள் போராட்டத்திற்கு முன் கற்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்த வைப்பது போன்ற வீடியோ எடியூரப்பாவிடம் காண்பிக்கப்பட்டது.
இதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடியூரப்பா, மங்களூரு கலவரம் திட்டமிட்ட சதி.இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்த நிதி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் கொல்கத்தாவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.இந்த ஆர்ப்பாட்டத்தில், மங்களூருவில் போராட்டத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…