இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு.! தமிழகத்தில் 2.2% .. குஜராத் 38.09%…
இந்தியாவில் மாநில வாரியாக எந்தெந்த மாநிலங்களில் மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளார்கள் என்ற விவரத்தை நிதி ஆயோக் தலைமையிலான தேசிய பல பரிமாண வறுமைக் குறியீடு (MPI) ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவிலேயே குஜராத் தான் அதிக அளவில் உள்ளது . அம்மாநிலத்தில் 38.09 சதவீத மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதில் கிராமப்புறத்தில் 44.45 சதவீதமும், நகர்புறத்தில் 28.97 சதவீதமும் பதிவாகியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் 7.5 சதவீத மக்களும், பஞ்சாப்பில் 4.7 சதவீத மக்களும், தமிழ்நாட்டில் 2.2 சதவீத மக்களும், கேரளாவில் 0.55 சதவீத மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருப்பதாக நிதி ஆயோக்கின் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.