ஆர்ஆர்ஆர் படத்தை பிரதமர் மோடி தான் இயக்கினார் என பெருமை பட்டுக்கொள்ள கூடாது – மல்லிகார்ஜுனே கார்கே
”ஆஸ்கர் விருது” பெற்ற ஆர்ஆர்ஆர் படத்தை பிரதமர் நரேந்திர மோடி தான் இயக்கினார் என ஆளும் கட்சி பெருமை பட்டுக்கொள்ள கூடாது என மல்லிகார்ஜுனே கார்கே பேச்சு.
கடந்த ஜனவரி மாதம், ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த RRR, படத்தில் கீரவாணி இசையில் இடம்பெற்ற நாட்டு நாட்டு எனும் பாடலுக்கு, சர்வதேச அளவிலான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று “ஆர்.ஆர்.ஆர்” திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது கிடைத்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு மல்லிகார்ஜுனே கார்கே வாழ்த்து
இந்த நிலையில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள், ஆஸ்கர் விருது பெற்ற ஆர்ஆர்ஆர் படத்தை பிரதமர் நரேந்திர மோடி தான் இயக்கினார் என ஆளும் கட்சி பெருமை பட்டுக்கொள்ள கூடாது.
ஆஸ்கர் விருது பெற்ற ஆர்ஆர்ஆர் படக்குழு மற்றும் ஆவணப்பட தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துகள்; இவை தென்இந்தியர்களுக்கு கிடைத்த வெற்றி, அதில் இந்தியாவுக்கு பெருமிதம் என தெரிவித்துள்ளார்.