மல்லிகார்ஜுனே கார்கே, தலைமையில் கரை ஏறுமா காங்கிரஸ் ?
தலைமையின்றி தவித்த காங்கிரஸ்க்கு, மல்லிகார்ஜுனே கார்கே தலைமையின் கீழ் காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெறுமா?
காங்கிரஸ் பேரியக்கத்தைத் தவிர்த்துவிட்டு, இந்திய அரசியலை எழுதிவிட முடியாது.
வெள்ளையர்களை எதிர்த்த போராட்டங்களிலும், சுதந்திர இந்தியாவை கட்டமைத்ததிலும் காங்கிரஸ்க்கு பெரும் பங்கு உண்டு.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, இந்திய அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார்.
அப்படிப்பட்ட காங்கிரஸ் இயக்கத்திற்கு தற்பொழுது ஒரு சோதனை காலம் என்றே கூறலாம்.
அடுத்தடுத்து 2 முறை தேர்தல் தோல்வி, பல மாநிலங்களில் ஆட்சி இழப்பு, கட்சி தாவல்கள் என பெரிய தலைவலிகள் காங்கிரசுக்கு உண்டாகியது. ராகுல் காந்தி, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகிய நிலையில், சோனியா காந்திக்கும் உடல்நலம் பாதிக்கப்பட காங்கிரஸின் எதிர்காலம் கேள்விக்குள்ளாக்கபட்டது.
பல மாநிலங்களில் ராகுல் தலைமை ஏற்க தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. இருப்பினும் ராகுல், தான் தலைமையேற்க போவதில்லை என அறிவிக்க, பல ஆண்டுகளுக்கு பின் நேரு குடும்பத்தினர் அல்லாத ஒருவர் தலைமை ஏற்கும் சூழல் உருவானது.
சசி தரூர், மல்லிகார்ஜுனே கார்கே போட்டியிட்ட நிலையில், கார்கே வென்றிருக்கிறார். கார்கே பலமுறை MLA, MP யாக இருந்துள்ளார். பல ஆண்டு அரசியல் அனுபவம் உள்ளவர். மேலும் அடிப்படை மக்களுக்காக யோசிக்கும் ஒரு நபர்.
எதிர்கட்சிகள் பலமாய் இருப்பது, ஜனநாயகத்தின் மாண்புக்கு அவசியம்.
இன்றைய இந்திய அரசியல் சூழலில் காங்கிரஸ் பலமாக இருப்பது மிக அவசியம்.
புதிய தலைமை கார்கே, வழிகாட்டுதலில் காங்கிரஸ் புத்துயிர் பெறும் என நம்புவோம்.