இந்தியா கூட்டணி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு!
இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சீதாராம் யெச்சூரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பரபரப்பாகும் இந்தியா கூட்டணி.. இன்று முக்கிய ஆலோசனை!
இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம், ஒருங்கிணைப்பாளர் நியமனம், தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நிராகரித்ததாக கூறப்படுகிறது. இதனால், எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக (தலைவர்) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.