மாநிலங்களவை தலைவராக மல்லிகார்ஜுன கார்கேவை நியமிக்க காங்கிரஸ் முடிவு ?
மாநிலங்களவை தலைவராக மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவை தலைவராக நியமிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குலாம்நபி ஆசாத் மாநிலங்களவை காங்கிரஸ் தலைவராக இதுவரை இருந்து வந்தார்.வருகின்ற 15-ஆம் தேதியுடன் இவருடைய எம்.பி. பதவிக் காலம் முடிவடைகிறது.ஆகவே காங்கிரஸ் தலைவரின் பதவிக்காலம் முடிவடைகிறது.இதனால் மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு புதிய நபர் நியமிக்கப்பட உள்ளார்.
ஆகவே மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவை தலைவராக நியமிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர்.தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். கடந்த 9-ஆம் தேதி டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஓய்வு பெறும் எம்பிக்களுக்கான பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில், காஷ்மீரை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வரும் அவரது பதவி காலம் நிறைவடைவதையொட்டி பிரதமர் மோடி அவரை பாராட்டி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.