என்னுடன் போட்டியிட்ட சசிதரூர் உடன் கட்சி குறித்து ஆலோசித்தேன்.! காங் தலைவர் கார்கே பேட்டி.!
தலைவர் தேர்தலில் எனக்கு எதிராக போட்டியிட்ட சசிதரூருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சசிதரூராரை நான் நேரில் சந்தித்து கட்சியை முன்னேற்றப்பாதையில் எடுத்துச்செல்வது குறித்து ஆலோசனை நடத்தினேன். – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று தேர்தல் ரிசல்ட் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
இதனை அடுத்து பலரும் தங்கள் வாழ்த்துக்களை மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தெரிவித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று அவரது இல்லம் தேடி சென்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார் மல்லிகார்ஜுன கார்கே பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அதில் பேசிய, கார்கே, ‘ கடந்த 24 ஆண்டுகளாக சோனியா காந்தி கட்சியை வழிநடத்தினார். அவரது தலைமையில் தான் காங்கிரஸ் கட்சி 2 முறை ஆட்சியை கைப்பற்றியது. அதற்காக தொண்டர்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என தெரிவித்தார்.
பின்னர் பேசிய கார்கே, ‘ தலைவர் தேர்தலில் எனக்கு எதிராக போட்டியிட்ட சசிதரூருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சசிதரூராரை நான் நேரில் சந்தித்தேன். கட்சியை வலுப்படுத்துவது குறித்தும், கட்சியை முன்னேற்றப்பாதையில் எடுத்துச்செல்வது குறித்தும் அவருடன் ஆலோசனை நடத்தினேன்.’ என பேசினார்.
இறுதியாக, ‘ காங்கிரஸ் கட்சியில் வயது பாகுபாடு இல்லை. அனைவரும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களாக இணைந்து கட்சிக்காக உழைக்க வேண்டும். ஜனநாயகதிற்கு எதிரான பாசிச மற்றும் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையோடு நாம் இணைந்து போராட வேண்டும்.’ செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு தெரிவித்தார் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
இவர் அதிகாரபூர்வமாக வரும் 26ஆம் தேதி காங்கிரஸ் கட்சி தலைவராக பதவியேற்றுக்கொள்வார் என கூறப்படுகிறது.