பிரதமர் மோடியின் அரசு பயத்தில் இருக்கிறது… மல்லிகார்ஜுன கார்கே பேட்டி
Mallikarjun Kharge : நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடி ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கார்கே கூறியதாவது, நமது நாட்டின் அரசியலமைப்பை பாஜக முழுமையாக ஏற்கவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் சொல்ல வேண்டும்.
Read More – தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க மாட்டோம்..! நாங்கள் முட்டாள் இல்லை.. கர்நாடக துணை முதல்வர் திட்டவட்டம்
கருத்துச் சுதந்திரம் செயல்கள் முழுவதையும் பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக அரசு ஏற்க மறுக்கிறது. அரசியலமைப்பை மாற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்று மக்களைச் சொல்ல வைக்கிறார். பி.ஆர்.அம்பேத்கர் பற்றி பேசிக்கொண்டு சமூகநீதி கொள்கைகள் எதையும் நடைமுறைப்படுத்தாமல் இருந்து வருகிறது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு.
Read More – நாட்டையே உலுக்கிய சிறுமி பாலியல் கொலை..! சோப்பை விழுங்கி குற்றவாளி தற்கொலை நாடகம்
அரசியல் சட்டத்தை திருத்துவது குறித்து பாஜகவின் எம்பி கருத்து தெரிவித்ததை அடுத்து, பாஜக அரசியலமைப்பை ஏற்கவில்லை என்று மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டி, அம்பேத்கர் மீது பாஜக நம்பிக்கை வைத்தால், அத்தகையவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும், அவர்களுக்கு தேர்தல் சீட்டு வழங்கக்கூடாது என்றுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, பிரதமர் நரேந்திர மோடியின் அரசு பயத்தில் இருக்கிறது. தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை எஸ்பிஐ வங்கி வெளியிடுவதற்கு நான்கு மாத கால தாமதம் ஏன்? என கேள்வி எழுப்பிய அவர், தேர்தல் பத்திரம் குறித்த விவரங்களை வெளியிட்டால் உண்மை வெளியே வந்து விடும் என்கிற பயத்தில் பிரதமர் மோடியின் அரசு இருக்கிறது என விமர்சித்தார்.
Read More – தேர்தல் பத்திரங்கள்… நாளை தான் கடைசி.! ஸ்டேட் பேங்கிற்கு ‘செக்’ வைத்த உச்சநீதிமன்றம்.!
எனவே, வரும் மக்களவை தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடி ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கொண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் 100% வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.