#UNLOCK 1.0 : மால் மற்றும் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி.!
மூன்றாம் கட்ட தளர்வு நடவடிக்கைகளில் ஷாப்பிங் மால், தியேட்டர் ஆகியவை திறக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மத்திய அரசனது இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு தடைசெய்யப்பட்ட பகுதிகளாக இருக்கும் பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்த பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது.
இதில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு வழக்கம் போல நீட்டிக்கப்படும் எனவும் மற்ற பகுதிகளில் படிப்படியான தளர்வுகள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதில், முக்கியமாக மூன்றாம் கட்ட தளர்வு நடவடிக்கைகளில் ஷாப்பிங் மால், தியேட்டர் ஆகியவை திறக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், 3ஆம் கட்ட தளர்வு நடவடிக்கைகளில், மெட்ரோ ரயில், நீச்சல் குளம், ஜிம் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்படவும் முடிவு எடுக்கப்படும். இந்த விதிமுறைகளைஅந்தந்த மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தில்ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய்ந்து இந்த தளர்வுகளை அமல்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.