மலையாளி தலிபான்கள் : சசி தாரூர் ட்விட்டர் பதிவால் சர்ச்சை!
தலிபான்களில் மலையாளிகள் இருப்பதாக கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தற்பொழுது தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று தலிபான் பயங்கரவாதிகள் சந்தோசத்தில் நடனமாடிய வீடியோ ஒன்று வெளியாகியது. இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த முன்னாள் மத்திய அமைச்சரும், கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பியுமாகிய சசிதரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இந்த தலிபான்களில் இரண்டு மலையாளிகள் உள்ளதாக பதிவிட்டுள்ளார். இவரது இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் இதற்கு ரமீஸ் ராஜா, தலிபான்களில் கேரளாவை சேர்ந்த யாரும் இல்லை. எனவும், அவர்கள் ஜாபுல் மாகாணத்தின் பலோக் பகுதியை சேர்ந்தவர்கள் அப்பகுதியினர் பேசக்கூடிய மொழி கேட்பதற்கு மலையாளம் போலதான் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். கேரளாவை சேர்ந்த மக்களை பயங்கரவாதத்துடன் இணைத்து சசி தரூர் கூறியுள்ளதாக பலர் இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த பதிவு,
It sounds as if there are at least two Malayali Taliban here — one who says “samsarikkette” around the 8-second mark & another who understands him! https://t.co/SSdrhTLsBG
— Shashi Tharoor (@ShashiTharoor) August 17, 2021