காதல் திருமணங்களுக்கு பெற்றோர்களின் கையெழுத்தை கட்டாயமாக்க வேண்டும் – குஜராத் சட்டசபையில் கோரிக்கை

Default Image

குஜராத்  சட்டசபையில், காதல் திருமணங்களில் பெற்றோரின் கையொப்பத்தை கட்டாயமாக்க கோரிக்கை. 

குஜராத்  சட்டசபையில், காதல் திருமணங்களில் பெற்றோரின் கையொப்பத்தை கட்டாயமாக்க, தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் செய்ய பாஜக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

காதல் திருமணங்களில் பெற்றோரின் கையெழுத்தை கட்டாயமாக்கும் சட்டம் 

சட்டத் துறை மீதான விவாதத்தின் போது, காதல் திருமணங்களில் பெற்றோரின் கையெழுத்தை கட்டாயமாக்கும் சட்டத் திருத்தத்தை அரசாங்கம் கொண்டு வர வேண்டும் என்று கலோல் ஃபதேசின் சௌஹான் பாஜக எம்எல்ஏ கோரினார்.

பெற்றோரின் அனுமதியின்றி நடக்கும் திருமணங்கள் மாநிலத்தில் குற்ற விகிதத்தை அதிகரிக்கின்றன. பெற்றோர் சம்மதத்துடன் பதிவு செய்தால், குற்ற விகிதம் 50% குறையும் என்றும், கோர்ட் திருமணங்கள் அந்தந்த பகுதியில் பதிவு செய்யப்படுவதில்லை என தெரிவித்தார்.

ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் ஆவணங்களை மறைத்து மற்ற மாவட்டங்களில் திருமணம் செய்து, பின்னர் பெண் பாதிக்கப்படுகிறார்கள் அல்லது பெற்றோர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தங்கள் தொழிலின் காரணமாக பிஸியாக இருக்கும் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடியாது. எனவே சமூக விரோதிகள் இதை சாதகமாக பயன்படுத்தி பெண்களுடன் ஓடிவிடுகிறார்கள்.

திருமணங்களில் பெற்றோரின் கையெழுத்தை கட்டாயமாக்கும் சட்டத் திருத்தத்தை அரசு கொண்டுவர வேண்டும் என்ற  கோரிக்கையை வாவ் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெனி தாக்கூர் எழுப்பினார். அதேபோல், மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் இதே கோரிக்கைகளை எழுப்பினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்