பிரதான கட்சியான காங்கிரஸ் இறந்து விட்டது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கூறியுள்ளார்.
டெல்லியில் கொரானா வைரஸ்க்கு எதிரான போராட்டத்தில் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு வருவதற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.நாட்டில் கொரோனா பரவால் மற்றும் அரசியல் நிலைமை குறித்து ஆனந்த் மிஸ்ரா மற்றும் ஷெமின் ஜாய் ஆகியோருடன் காணொளி மூலமாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் பேசியுள்ளார்.அப்பொழுது பேசிய அவர், காங்கிரஸ் பாஜக ஆகிய கட்சிகள் தொடர்பாகவும் தனது கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்து விளக்கியுள்ளார்.
அப்பொழுது அவரிடம் ராஜஸ்தானில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டபோது ஆம் ஆத்மி ஏன் பாஜகவுக்கு பதிலாக காங்கிரஸை குறி வைத்தது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், காங்கிரஸ் பாஜக இரண்டையும் நாங்கள் குறிவைத்தோம். ஏனெனில் எம்எல்ஏக்களை விற்பனை செய்வதையும் வாங்குவதையும் தான் இவர்கள் தொழிலாக வைத்திருக்கிறார்கள், தவிர அரசியலில் நிலைமை மோசமாகத்தான் உள்ளது. எல்லையில் சீனா எங்களை தொந்தரவு செய்து வரக் கூடிய நிலையில் கொரோனாவும் நாடு முழுவதும் பரவி இருக்கிறது. ஆனால் இந்த இரண்டு தேசியக் கட்சிகளும் ராஜஸ்தானில் அந்நேரத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. நான் நாட்டை குறித்து மிகவும் கவலைப்படுகிறேன்.
நாட்டின் மீது அதிக அக்கறை உள்ளதால் இந்த நேரத்தில் மத்திய அரசும் பாஜகவும் கொரோனா வைரஸுக்கு எதிராக போராடுவதற்கு ஒன்றாக இணைந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எம்எல்ஏக்களை விற்பது என்ற மோசமான அரசியல் செய்து வந்தனர். இது மிகவும் தவறானது, முதலில் கோவாவிலும் கர்நாடகாவிலும், மத்திய பிரதேசத்திலும் இருந்தது. தற்போது இதே நிலைதான் ராஜஸ்தானிலும் தொடர்கிறது. தேசிய அளவில் வெற்றிடம் ஒன்று உள்ளது, அதனை ஆம் ஆத்மி கட்சி நிரப்ப போதுமானதாக உள்ளது. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தற்பொழுது இறந்துவிட்டது. பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளால் மக்கள் மகிழ்ச்சி அடையவில்லை. எனவே நாட்டில் ஒரு மாற்று சூழ்நிலை தோன்ற வேண்டும் என விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…