முன்பையில் மஹிந்திராவின் முன்னாள் தலைவர் கேசுப் மஹிந்திரா காலமானார்.
பிரபல தொழிலதிபரும், மஹிந்திரா குழுமத்தின் முன்னாள் தலைவருமான கேசுப் மஹிந்திரா (99) வயது மூப்பு காரணமாக மும்பையில் இன்று காலை காலமானார். 1923 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி சிம்லாவில் பிறந்த கேசுப் மஹிந்திரா, அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் வார்டனில் தனது பட்டப்படிப்பை முடித்தார்.
அதன் பின்னர், 1947 ஆம் ஆண்டு தனது தந்தை நிறுவிய கார் உற்பத்தி நிறுவனத்தில் இணைந்த கேசுப் மஹிந்திரா, 1963 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை நிறுவனத்தின் தலைவராக பணியாற்றினார். அவர் ஓய்வு பெற்றவுடன் அவரது அடுத்த வாரிசாக மருமகன் ஆனந்த் மஹிந்திரா நிறுவனத்தின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் (INSPACe) தலைவர் பவன் கோயங்கா ட்வீட் மூலம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், “தொழில்துறை உலகம் இன்று மிக உயர்ந்த ஆளுமைகளில் ஒருவரை இழந்துவிட்டது. ஸ்ரீ கேசுப் மஹிந்திராவுக்கு எந்தப் போட்டியும் இல்லை, அவர் வணிகம், பொருளாதாரம் மற்றும் சமூக விஷயங்களை எவ்வாறு இணைத்தார் என்பதன் மூலம் நான் ஈர்க்கப்பட்டேன்” என்று கூறினார்.
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…