பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு மஹிந்திரா கார் நிறுவனம் பிரத்யேக கார் ஒன்றை பரிசாக அறிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற மகளீர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் இன்று நடைபெற்ற மகளீர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில், இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே பாராலிம்பிக்கில் 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 3 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ள நிலையில், நான்காவதாக தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளது.
பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு இது முதல் தங்கப்பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. அவனி லெகாரா (19) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர். இவர் இந்த போட்டியில் 249.6 புள்ளிகள் பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே படைத்துள்ள உலக சாதனையை சமன் செய்துள்ளார்.
தங்கம் வென்ற அவனிக்கு பலரும் வாழ்த்துக்களையும் பரிசுகளையும் அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல கார் நிறுவனமான மஹிந்திரா, தற்போது அவனிக்கு பரிசு ஒன்றை அறிவித்துள்ளது. இன்னும் விற்பனைக்கு வராத மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள எஸ்யுவி காரின் முதல் காரை இவருக்கு பரிசாக அறிவித்துள்ளது.
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…