தேசத்தந்தை மஹாத்மா காந்தியின் மகத்தான வாழ்க்கை….!!!
நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் முழுப் பெயர், “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி”. இவர் 1896 ஆம் ஆண்டு ஆக்டொபர் மாதம் 02 ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாக பிறந்தார். இவரது தாய்மொழி குஜராத்தி ஆகும். காந்தியின் தந்தை போர்பந்தரில் திவானாக பணி புரிந்தவர்.
காந்தியின் ஆரம்ப வாழ்க்கை :
காந்தி ஒரு நேர்மையான மனிதன். அவர் பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கியவர். இவர் தன்னுடைய 13 வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் இவர் பாரிஸ்டர் எனப்படும் வழக்கறிஞர் படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட காரணம் :
காந்தியின் தென்னாப்பிரிக்க பயணம் தான் அவர் அரசியலில் ஈடுபட காரணமாக அமைந்தது. குறிப்பாக தென் ஆப்பிரிக்காவை டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக, ரெயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும் தான் இவரது வாழ்க்கையில் அரசியலை நோக்கி பயணம் செய்த நிகழ்வாக கருதப்படுகிறது.
ஆங்கில ஆட்சிக்கு எதிராக, இந்திய விடுதலைக்காக அந்நிய பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம், வரிகொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பல போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தியுள்ளார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் :
காந்தியடிகள் பல போராட்டங்களில் அகிம்சை வழியில் போராடி, சிறை சென்று வெற்றி பெற்றாலும், அவரது வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது இந்த வெள்ளையனே வெளியேறு இயக்கம் தான். 1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘ வெள்ளையனே வெளியேறு இயக்கத்தினை காந்தியடிகள் துவக்கி வைத்தார்.
காந்தியின் மன உறுதியையும் அகிம்சை பலத்தையும் கண்டா ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திர பிரகடனம் அரங்கேறியது. ஆனால், இந்திய – பாக்கிஸ்தான் பிரிவினரை காந்தியடிகளை மிகவும் பாதித்தது.
இறப்பு :
அகிம்சை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன மஹாத்மா காந்தி அவர்கள், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் புதுதில்லியில் நாதுராம் கோட்சே என்னும் கொடியவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.