மகாத்மா காந்தி பிறந்தநாள் : பிரதமர், குடியரசு தலைவர் மரியாதை…!
மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய அரசியல் பிரபலங்கள்.
தேசதந்தை மகாத்மா காந்தி அவர்களின் 153-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து தலைவர்கள் மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் டெல்லியில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, ராஜ்கோட்டில் உள்ள அவரது நினைவிடத்தில், பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.