மகாத்மா காந்தி பிறந்தநாள் : டெல்லியிலுள்ள நினைவிடத்தில் குடியரசு தலைவர் மலர் தூவி மரியாதை!
மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் மலர் தூவி மரியாதை.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என அழைக்கப்படக்கூடிய இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆகிய அன்பு தந்தை காந்தியடிகள் அவர்கள் மகாத்மா காந்தி என அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்தியாவிற்கு விடுதலை பெற்றுத் தந்ததில் முக்கிய காரணமாக இருக்கும் அவர் இந்தியாவின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார். போர்பந்தரில் அக்டோபர் இரண்டாம் தேதி பிறந்த இவருக்கு இன்றுடன் 151 வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. காந்தியடிகளின் பிறந்த நாளில் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாளான இன்று டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளில் தேச நலமும் முன்னேற்றமும் அடைந்திட நம்மை அர்ப்பணித்து அகிம்சை வழியை பின்பற்றுவோம் எனவும், காந்தியடிகளின் அன்பு உண்மை அகிம்சை ஆகியவை உலக நலனுக்கு வழிவகுக்கிறது எனவும், தூய்மையான திறமையான, வலுவான, வளமான இந்தியாவை நாம் உருவாக்கி காந்தியின் கனவை நனவாக்குவோம் எனவும் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
The 151st anniversary is a good occasion to think through our priorities in the light of Gandhiji’s life and thought, and prepare ourselves again to hear his voice in our hearts.
— President of India (@rashtrapatibhvn) October 2, 2020