இந்திய தேச தந்தை மகாத்மா காந்தியடிகளின் சிலை தகர்க்கப்பட்டது இந்திய மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் அம்ரேலியில் மகாத்மா காந்தியடிகள் சிலையை சமூக விரோதிகள் தகர்த்துள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது. அம்ரேலி மாவட்டத்தில் ஹரி கிருஷ்ணா என்ற ஏரியில் மகாத்மா காந்தி சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை சூரத் தொழிலதிபர் ஒருவரின் அறக்கட்டளை மூலம் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலையை நேற்று இரவு சமூக விரோதிகள் சிலர் உடைத்து தகர்த்து தரையில் வீசியுள்ளனர்.
சமூக விரோதிகளின் இந்நடவடிக்கை இந்தியாவையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதையடுத்து அந்தபகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள விரும்பாத சமூக விரோதிகள் சிலரே இந்த கொடுஞ்செயலை செய்திருக்கலாம் என்கிறார் காவல்துறை அதிகாரி ஒய்.பி. கோஹ்லி. இந்த சிலை உடைப்பு சம்பவம் இந்திய மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…