மகாராஷ்டிராவில் நாளை முதல் மீண்டும் தொடங்கும் பேருந்து போக்குவரத்து.. பயணத்திற்கு இ-பாஸ் தேவையில்லை!
மகாராஷ்டிராவில் நாளை முதல் பேருந்து சேவைகள் தொடரும் என அம்மாநில போக்குவரத்துக்கு கழகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில், அங்கு நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக, 3 -ம் கட்ட தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்தநிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை முதல் பேருந்து போக்குவரத்துக்கான சேவை தொடரும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், 5 மாதங்களுக்கு பிறகு மகாராஷ்டிராவில் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து சேவைக்கு அம்மாநில முதல்வர் அனுமதி அளித்துள்ளதது.
இதற்கு இ-பாஸ் தேவையில்லை எனவும் இதற்கான புதிய விதிமுறைகளை போக்குவரத்து கழகம் விரைவில் அறிவிக்கும் எனவும் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.