#BREAKING : விநாயகர் சிலை கரைப்பின் போது பரிதாபம்.! நீரில் மூழ்கி, மின்தாக்கி 20 பேர் பலி.!
மஹாராஷ்டிரா மாநிலம் முழுவதும் வெவ்வேறு பகுதிகளில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டபோது மொத்தமாக பல்வேறு இடங்களில் 20 உயிரிழப்புகள் ஏற்பட்டதாக மாநில அரசு சார்பில் தெரிவித்துளளது.
விநாயகர் சதுர்த்தி கடந்த மாதம் (ஆகஸ்ட்) 31ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் விநாயகர் சிலை பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டு பூஜைகள் செய்யப்படும்.
அவ்வாறு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட நாட்களில் நீர்நிலைகளில் கரைக்கப்படும். அப்படி கரைக்கப்படும் போது நாடுமுழுவதும் பல்வேறு பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவது வேதனைக்குரிய ஒன்றாக மாறிவிட்டது.
அப்படி தான், மஹாராஷ்டிரா மாநிலத்தில் நிறுவப்பட்ட சிலைகள் நேற்று மாநிலம் முழுவதும் பல்வேறு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. அப்போது நீரில் மூழ்கியும், விபத்துகள், மின்சாரம் தாக்கி என அதிக உயிரிழப்புகள் மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.
அதில் மாநிலம் முழுவதும் மொத்தமாக 20 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் நீர்நிலைகளில் சிக்கி 14 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.