மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல் அமைச்சராக பொறுப்பேற்றார். தேசியவாத காங்கிரஸ் சார்பாக அஜித் பவார் துணை முதல்வராக பொறுப்பேற்றார். இவர்களுக்கு அன்று காலையிலேயே ஆளுநர் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநரின் இந்த முடிவு க்கு எதிராக நேற்று உச்சநீதிமன்றத்தில் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இருவரும் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த வழக்கில் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பாக வழக்கறிஞர் கபில் சிபில் மற்றும் அபிஷேக் சிங்வி ஆஜர் ஆனார்கள். அவர் கர்நாடக மாநிலத்தை போல இங்கும் குதிரை பேரம் எதுவும் நடந்து விடக்கூடாது எனவும், பதவி ஏற்பு பிராமண பாத்திரம், எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கடிதம் ஆகியவற்றை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.
உசனநீதிமன்றத்தில் இதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜக சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், ஆளுநரின் உத்தரவை நீக்குவதற்கு அதிகாரம் கிடையாது. வேண்டுமென்றால் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடலாம் என தங்களது தரப்பு வாதத்தையும் முன் வைத்துள்ளார்.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பத்னாவிஸ், மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோருக்கு நோட்டிஸ் அனுப்பி, இந்த வழக்கின் விசாரணையை இன்று உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து. இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின் விசாரணை தொடங்க உள்ளது. இந்த தீர்ப்பை மகாராஷ்டிர மாநிலம் மட்டுமல்லாது இந்திய அரசியல் களமே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…
சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…