ஓபிசி பிரிவுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு… உச்சநீதிமன்றம் தீர்ப்பு.. தேர்தல் வேலைகள் தீவிரம்..
மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் இடஒதுக்கீடு சம்பந்தமாக எழுந்த பிரச்சனை உச்சநீதிமன்றம் வரை சென்றது.
இந்த விவகாரத்தில், தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஓபிசி பிரிவினருக்கு உள்ளாட்சி தேர்தலில் 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி தீர்ப்பளித்தது.
இதனை மஹராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் டிவிட்டரில் வரவேற்று வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற உள்ள 367 உள்ளாட்சி இடங்களுக்கான தேர்தலுக்கான வேலைகள் மும்முரமாக தொடங்கி உள்ளன.