இனி…! வீடு தேடி வரும் மதுபாட்டில்கள்……..மாநிலத்திற்கே தலைகுணிவு……….தாக்கிய தாக்கரே !!!
மகாராஷ்டிரா மாநில மக்களுக்கு வீடு தேடி வரும் மதுபாட்டில்கள்,மாநிலத்திற்கு தலைகுணிவு என்று உத்தவ் தாக்கரே தாக்கி பேசியுள்ளார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மக்களுக்கு வீடு தேடி வரும் மதுபாட்டில்கள் வரத் தேவையில்லை மேலும் அவற்றை மக்கள் கேட்கவும் இல்லை, இதற்கு மாறாக, அவர்கள் வீடு தேடி வரும் உதவியைத் தான் விரும்புகிறார்கள் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா அரசு வீட்டுக்கே மதுவகைகளை ஹோம் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது.மேலும் இது குறித்து தேரிவித்த மகாராஷ்டிரா அரசு மது அருந்திவிட்டு வாகனம் இயக்கி விபத்தில் சிக்குவோர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவே இந்த திட்டம் என்று தெரிவித்தது. அம்மாநில அரசின்கலால்வரித்துறை அமைச்சர் சந்திரசேகர் பவான்குலே அளித்த பேட்டியில், ஆன்-லைனில் மதுவிற்பனையை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது.வீட்டுக்கே மதுவகைகள் டெலிவரி செய்யப்படும். இந்தத் திட்டமாக இருக்கிறது, இன்னும் இறுதிமுடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்த திட்டம் குறித்து சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மும்பையில் பேட்டி அளித்தார். அதில் மகாராஷ்டிரா மக்களுக்கு வீடுதேடி மதுவகைகள் கொடுக்கத்தேவையி்ல்லை. மக்கள் பற்றாக்குறை மழையால் மக்கள் அவதிப்படுகிறார்கள். அவருக்கு உதவிதேவை. அவர்களுக்கு வீடு தேடி உதவிதான் தேவையைத் தவிர மதுபாட்டில்கள் தேவையில்லை என்று கடுமையாக சாடியுள்ளார்.
மேலும் ஆன்-லைனில் மதுவகைகளை ஆர்டர் செய்து குடிப்பது இந்த மாநிலத்தின் பாரம்பரியம் அல்ல. ஒவ்வொரு நாளும் மாநில அரசு செய்யும் செயல்களும், அறிவிக்கும் திட்டங்களும், இந்த மாநிலத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் மக்கள் பற்றாக்குறை மழையால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் மத்திய அரசின் உதவியைப் பெறுவதற்காக வரிசையில் நின்று மக்கள் காத்துக்கிடந்து அந்த உதவியை பெறும் அவலத்தை ஏற்படுத்திவிடாதீர்கள் எனத் மாநில அரசை தாக்கரே தாக்கி பேசியுள்ளார்.
DINASUVADU