மஹாராஷ்டிராவில் எதிர்க்கட்சி அந்தஸ்த்தை கூட இழந்துவிட்டதா காங்கிரஸ்!?
மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. இதில் அம்மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில் ஆளும் பாஜக – சிவசேனா கூட்டணி மீண்டும் போட்டியிட்டன. இதில் பாஜ 152 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
காங்கிரஸ் கட்சியானது தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் 145 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 123 இடங்களிலும் போட்டியிட்டுள்ளது.
இதில் பாஜக 99 தொகுதிகளிலும், சிவசேனா 56 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 55 தொகுதிகளிலும், காங்கிரஸ் 43 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறன்றன.
இதில் காங்கிரஸ் கூட்டணி இரண்டாம் இடத்தை பெற்றாலும், தேசியவாத காங்கிரஸ் தான் பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும். இந்திய தேசிய காங்கிரஸ் நான்காம் இடமே பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.