கொரானாவின் கோரப்பிடியில் மகாராஷ்டிரா.! 1,00,000-ஐ தாண்டியது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.!
மஹாராஷ்டிராவில் நேற்று மட்டும் ஒரே நாளில் 3,493 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரே நாளில் 127 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உருவெடுத்துள்ளது மகாராஷ்டிரா மாநிலம். அம்மாநிலத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 3,493 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரே நாளில் 127 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் தற்போது மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,01,141 ஆக அதிகரித்துள்ளது. 47,916 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அம்மாநிலத்தில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் அதற்காக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அம்மாநில முதல்வர் கொரோனா தடுப்பு பற்றி மக்களிடம் கூறுகையில், பொதுமக்கள் அவர்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மேலும், மற்ற மாநிலங்களில் தளர்வு அறிவிக்கப்பட்டதால் பாதிப்பு அதிகமாகி வருவதை சுட்டி காட்டி பேசியுள்ளார்.