அரசு ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி.! தீபாவளி போனஸை அறிவித்தார் மகாராஷ்டிரா முதல்வர்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார் மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.
மஹாராஷ்டிரா அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அறிவித்தார் அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. மகாராஷ்டிரா மாநில முனிசிபல் கார்பரேஷன் ஊழியர்கள், மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பு அரசு ஊழியர்களுக்கு இந்த போனஸை அறிவித்துள்ளார்.
அவர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை போனஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. முனிசிபல் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சுமார் 93,000 பேருக்கும், ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுடன் சேர்ந்து BEST இன் கிட்டத்தட்ட 29,000 ஊழியர்களுக்கும் இந்த போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி), பிரஹன்மும்பை மின்சாரம் மற்றும் போக்குவரத்து (பெஸ்ட்), மற்றும் சிவில் அமைப்புடன் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஊழியருக்கும் தீபாவளி போனஸ் ரூ.22,500 என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வியாழக்கிழமை அறிவித்தார்.
இது குறித்து முதல்வர் ஷிண்டே வியாழக்கிழமை கூறுகையில், ‘ கோவிட் -19 கட்டுப்பாடு காலத்தின் போது, பல சிரமங்களை எதிர்கொண்ட அரசு ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். மும்பையில் கொரோனா நிலைமையை கட்டுக்குள் வைத்திருப்பதில் மருத்துவர்கள் மட்டுமல்ல, முழு மருத்துவ ஊழியர்களும் முக்கிய பங்கு வகித்தனர் என்று கூறினார்.