கொரோனா வைரஸ்அதிகம் பாதித்த மாநிலங்களில் முதலிடத்தில் மகாராஷ்டிரா! தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் இடம் பெற்றுள்ளதுடன், மகாராஷ்டிரா தான் இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. தினமும் லட்சக்கணக்கானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரம் அடைந்து வந்தாலும், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனாவின் புதிய பதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போதும் மத்திய அரசு கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் மகாராஷ்டிரா தான் முதலிடத்தில் உள்ளது. இதுவரை மகாராஷ்டிராவில் 26,37,735 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 23,00,056 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 53,907 பேர் மகாராஷ்டிராவில் உயிரிழந்துள்ளனர். அடுத்தபடியாக கேரளா தான் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
மூன்றாவதாக கர்நாடகா, அடுத்த படியாக ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா என வரிசைப்படி அட்டவணை படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில உள்ளது. தமிழகத்தில் இதுவரை 8,75,190 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8,51,222 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் தமிழகம் முழுவதிலும் இதுவரை 12,650 பேர் உயிரிழந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நாங்க செய்யவில்லையா? நீங்க பார்த்தீங்ளா?” ரவி சாஸ்திரி விமர்சனமும்., இங்கிலாந்து கேப்டன் பதிலும்.,
February 13, 2025![England Captain Jos Butler - Ravi shastri](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/England-Captain-Jos-Butler-Ravi-shastri.webp)
“பாஜக தலைவராக நான் தொடர முடியாது! அதற்கு முன்னால்..,” அண்ணாமலை ஆவேசம்!
February 13, 2025![TN CM MK Stalin - BJP State president Annamalai](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TN-CM-MK-Stalin-BJP-State-president-Annamalai.webp)