மகாராஷ்டிராவில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு!
மகாராஷ்டிராவில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை இந்தியாவில், 3,08,507 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8893 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மஹாராஷ்டிராவில், கொரோனா பரிசோதனைக்கண் கட்டணத்தை அம்மாநில அரசு பாதியாக குறைத்துள்ளது. அதன்படி, பரிசோதனை கட்டணம் ரூ.4,400-ல் இருந்து ரூ.2,200 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து சோதனைகளை மேற்கொள்ளவதற்கான கட்டணம் ரூ.2,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.