மகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்து 3 பேர் பலி..!-11 பேர் மாயம்..!

மகாராஷ்டிராவில் உள்ள வரதா ஆற்றில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11 பேர் காணாமல் போய் உள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், அமராவதி மாவட்டத்தில் உள்ள வரதா ஆற்றில் காலை 10.30 மணியளவில் படகு ஒன்று கவிழ்ந்துள்ளது. இதில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 11 பேர் நீரில் மூழ்கியிருக்கலாம் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.
காவல்துறை மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் குழு தற்போது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும் இதுவரை ஒரு சிறுமியின் உடல் உட்பட மூன்று உடல்களை ஆற்றில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.
படகு அதன் எடையை தக்கவைக்க முடியாமல் விபத்துக்குள்ளானது என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும், இதுவரை மூன்று உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.