#Breaking:பெரும் பரபரப்பு…மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை கலைக்கப்படுகிறதா? – சிவசேனா முக்கிய தகவல்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ்,சிவசேனா,தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்த வேளையில், மகாராஷ்டிரா மாநில முதல்வருக்கு எதிராக ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 40 சிவசேனா எம்எல்ஏக்கள் குஜராத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் முகாமிட்டு போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இதனிடையே,முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கவிழ்த்து,தங்களது ஆட்சியை அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது.அந்த வகையில்,மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியமைக்க தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில்,ஆட்சியைக் கவிழ்க்கும் பாஜகவின் முயற்சி பலிக்காது என சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளரான சஞ்சய் ராவத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் அம்மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதை சிவசேனாவின் சஞ்சய் ராவத் சூசகமாக தெரிவித்துள்ளார்.
அதாவது,அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்:”மகாராஷ்டிராவில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி காரணமாக சட்டப்பேரவை கலைக்கும் நிலைக்குச் செல்கிறது” என தெரிவித்துள்ளார்.அவரின் இத்தகைய பதிவு மகாராஷ்டிரா மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
महाराष्ट्रातील राजकीय घडामोडींचा प्रवास विधान सभा बरखास्तीचया दिशेने..
— Sanjay Raut (@rautsanjay61) June 22, 2022