மகாராஷ்டிரா சாலை விபத்து..! பிரதமர் மோடி இரங்கல்…!
மகாராஷ்டிரா சாலை விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவோன் மாவட்டத்தில் யவல் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமத்தில் ஞாயிறு நள்ளிரவு சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த லாரியில் அபோதா, கேராலா, ரேவர் கிராமத்தை சேர்ந்தோர் பயணித்துள்ளனர். இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.