பரபரப்பில் மகாராஷ்டிரா அரசியல் களம் ! ஆளுநரை சந்திக்கும் 3 கட்சி தலைவர்கள்
மகாராஷ்டிரா அரசியலில் நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்று சிவசேனா,தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநரை சந்திக்க உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 இடங்கள்,சிவசேனா 56 இடங்கள்,தேசியவாத காங்கிரஸ் 54 இடங்கள்,காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.இந்த தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.ஆனால் அதற்கு பின்பு யார் ஆட்சி அமைப்பது சிக்கல் ஏற்பட்டது.இதனை தொடர்ந்து பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் ஆட்சியமைக்க தீவிரம்காட்டி வந்தது.தொடர்ந்து குழப்பமே நீடித்து வந்த நிலையில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதனிடையே சிவசேனா,தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.இதனையொட்டி இந்த 3 கட்சித் தலைவர்களும் ஆளுநர் பகத்சிங் கோசியாரியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளனர்.