#Breaking:பரபரப்பு…மகாராஷ்டிரா சட்டப்பேரவை;புதிய சபாநாயகர் யார்? – தொடங்கியது தேர்தல்!

Published by
Edison

மகாராஷ்டிராவில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை தொடர்ந்து,ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்றார்.மேலும்,பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து,மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில்,முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவு எம்எல்ஏக்கள் கோவாவில் இருந்து மும்பைக்கு திரும்பியுள்ளார்கள்.இதற்கிடையில்,கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் ஏக்நாத் ஷிண்டேவை கட்சியில் இருந்து நீக்கி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில்,மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இரண்டு நாள் சிறப்பு கூட்டம் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.அதேசமயம், மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு சபாநாயகரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில்,தற்போது அப்பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு,சபாநாயகர் பதவிக்கு பாஜக சார்பில் ராகுல் நர்வேகரும்,அதே சமயம்,மகாவிகா அகாதி கூட்டணி சார்பில் சிவசேனாவின் ராஜன் சால்வி ஆகியோர் நேரிடையாக போட்டியிடும் நிலையில்,தற்போது வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

அதன்படி,முதலாவதாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே,துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.இதனிடையே,மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு பெரும்பான்மையை பொருத்தமட்டில் 145 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே தேவையாக உள்ள நிலையில்,ஏற்கனவே பாஜகவுக்கு 161 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது.இதனால், பாஜக சார்பில் போட்டியிடும்  ராகுல் நர்வேகரும் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.எனினும்,இன்னும் சற்று நேரத்தில் முடிவுகள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

Recent Posts

சீனாவில் பரபரப்பு! கூட்டத்தில் காரை ஏற்றி 35 பேரை கொலை செய்த நபர்!

சீனாவில் பரபரப்பு! கூட்டத்தில் காரை ஏற்றி 35 பேரை கொலை செய்த நபர்!

சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…

10 hours ago

“காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைய வாய்ப்பில்லை”…வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவல்!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…

10 hours ago

நாளை வாக்குப்பதிவு எங்கெல்லாம்? : வயநாடு முதல் ஜார்கண்ட் வரை!!

டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…

10 hours ago

“நான் 30 நாள்…சிவா 90 நாள் தூங்கவில்லை”..கங்குவா குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா!!

மும்பை : கங்குவா திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் ரீதியாகச் சாதனை படைக்கும் எனப் படக்குழு மிகவும்…

11 hours ago

தமிழகத்தில் புதன்கிழமை (13/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…

11 hours ago

“அது தான் கடைசி ஒரு நாள் தொடர்”…ஓய்வை அறிவித்த முகமது நபி!

ஆப்கானிஸ்தான் : நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது…

12 hours ago